ECONOMY

இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 35,000க்கும் மேற்பட்ட பாஸ்தீனர்கள் பலி

19 மே 2024, 4:33 AM
இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 35,000க்கும் மேற்பட்ட பாஸ்தீனர்கள் பலி

அங்காரா, மே 19-  கடந்தாண்டு அக்டோபர்  மாதம் 7ஆம் தேதி முதல் காஸா  பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் குறைந்தது 35,386 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக முற்றுகையிடப்பட்ட பிரதேசத்தில் உள்ள சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது.

ஆக்கிரமிப்புப் படைகளின்  கோரத்  தாக்குதல்களில் மேலும் 79,366 பேர் காயமடைந்ததாக அமைச்சின் அறிக்கையை மேற்கோள் காட்டி   அனடோலு ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய  படைகள் நடத்திய தாக்குதல் களில் 83 பேர் கொல்லப்பட்டதோடு மேலும் 105 பேர் காயமடைந்துள்ளனர்.

கட்டிடங்களின் இடி பாடுகளிலும் சாலைகளிலும்   இன்னும் பலர் சிக்கியுள்ள நிலையில்   மீட்புக் குழுவினரால் அவர்களை அடைய முடியவில்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

முற்றுகையிடப்பட்ட பிராந்தியத்தில் உள்ள பெரும்பாலான  உள்கட்டமைப்புகள்  ஏழு மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் மோதல்களால் சேதமடைந்துள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன. உணவு, சுத்தமான நீர் மற்றும் மருந்து பற்றாக்குறைக்கு மத்தியில் இப்பகுதியில் உள்ள 85 விழுக்காட்டு மக்கள் வீடற்றவர்களாக ஆக்கப் பட்டுள்ளனர்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.