ECONOMY

இஸ்தானா நெகாராவில் அத்துமீறி நுழைய முயற்சி- பாராங் கத்தியுடன் இருவர் கைது

18 மே 2024, 9:34 AM
இஸ்தானா நெகாராவில் அத்துமீறி நுழைய முயற்சி- பாராங் கத்தியுடன் இருவர் கைது

கோலாலம்பூர் மே 18-  இஸ்தானா நெகாராவில் அத்துமீறி நுழைய முயன்ற  சந்தேகத்தின் பேரில் உள்ளூர் ஆடவர்கள் இருவர் கைது நேற்று செய்யப்பட்டனர்.

நேற்று மாலை 4.40 மணியளவில் பெரோடுவா கெம்பரா காரில் பேரரசரை சந்திக்கப் போவதாகக் கூறி மூன்றாவது நுழைவாயில் வழியாக அரண்மனைக்குள் நுழைய முயன்ற  29 மற்றும் 37 வயதுடைய இரு சந்தேக நபர்களும்  கடமையில் இருந்த காவல் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களின் காரில் நடத்தப் பட்டச்  சோதனையில்  ஒரு கத்தி கண்டுபிடிக்கப்பட்டது என்று கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ருஸ்டி முகமது இசா ஒரு அறிக்கையில் கூறினார்.

சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் அவர் போதைப் பொருளை பயன்படுத்த வில்லை என்பது தெரியவந்தது.  விசாரணைக்காக சந்தேக நபர்கள் இருவரும் மே 21ஆம் தேதி வரை நான்கு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்  என்றார் அவர்.

குற்றவியல் சட்டத்தின் 447/511 வது பிரிவு மற்றும் 1958 ஆம் ஆண்டு வெடிபொருள்  மற்றும் ஆபத்தான ஆயுதச் சட்டத்தின் பிரிவு 6 (1) ஆகியவற்றின் கீழ் இச்சம்பவம்  விசாரிக்கப்பட்டு வருகிறது என்று ருஸ்டி கூறினார்.

இந்த கைது தொடர்பில் எந்தவிதமான ஊகங்களையும் உறுதிப்படுத்தப்படாத செய்திகளையும் வெளியிட வேண்டாம் என அவர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.