NATIONAL

அனைத்து கல்வியாளர்களுக்கும் பிரதமர் ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார்

17 மே 2024, 4:15 AM
அனைத்து கல்வியாளர்களுக்கும் பிரதமர் ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார்

கோலாலம்பூர், மே 17 - தேசத்தைக் கட்டியெழுப்புவதில் விடாமுயற்சியுடன் இருக்கும் அனைத்து கல்வியாளர்களுக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆசிரியர் தின வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

மலேசியாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு, பங்கு மற்றும் ஆதரவு ஆகியவை மிக முக்கியமானவை என முகநூல் பதிவில் தெரிவித்தார்.

"எனவே, ஆசிரியர்களுக்குக் கோடான கோடி நன்றிகள், இந்த நாட்டிற்கு உங்கள் முழு முயற்சி தேவை, குறிப்பாக மடாணி மற்றும் திறமையான அடுத்த தலைமுறையை உருவாக்குவதில்," என அன்வார் கூறினார்.

அதே நேரத்தில், நாட்டின் கல்வி முறை மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் பிரதமர் கூறினார். இதன் மூலம், மலேசியா உயர் தார்மீக மட்டத்தில் சமமான அறிவைப் பெற முடியும்.

இந்த ஆண்டு ஆசிரியர் தினத்தின் கருப்பொருள் 'குரு ஜௌஹாரி டிஜிட்டல், அஸ்பிராசி நெகாரா மடாணி' ஆகும் என கல்வி அமைச்சு தெரிவித்தது. தேசிய அளவிலான கொண்டாட்டம் பகாங்கில் உள்ள (SASICC) சுல்தான் அஹ்மட் ஷா, சர்வதேச மாநாட்டு மையம், குவாந்தானில் நேற்று நடந்தது.

- பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.