ஜோகூர் பாரு, மே 17- இங்குள்ள உலு திராம் போலீஸ் நிலையத்தில்
இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இரு போலீஸ்காரர்கள்
கொல்லப்பட்டதோடு மேலும் ஒருவர் காயங்களுக்குள்ளானார்.
முகமூடி அணிந்திருந்த அந்த சந்தேக நபர் துப்பாக்கி மற்றும் பாராங்
கத்தியுடன் அதிகாலை 2.45 மணியளவில் அந்த போலீஸ் நிலையத்தில்
பிரவேசித்ததாக நம்பப்படுகிறது. இந்த தாக்குதலை ஜோகூர் மாநில
போலீஸ் தலைவர் எம். குமார் உறுதிப்படுத்தினார்.
இத்தாக்குதலுக்குக் காரணமான நபர் சுட்டுக் கொல்லப்பட்டதாகக்
கூறப்படுகிறது. அந்நபரிடமிருந்து வால்டர் பி99 கைத்துப்பாக்கி, எச்கே
எம்பி5 ரைபிள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.


