NATIONAL

எதிர்வரும் ஜூன் 5இல் சிலாங்கூரில் நீர் விநியோகத் தடை

17 மே 2024, 1:03 AM
எதிர்வரும் ஜூன் 5இல் சிலாங்கூரில் நீர் விநியோகத் தடை

ஷா ஆலம், மே 17: ஜூன் 5 அன்று காலை 9 மணி முதல் சுங்கை சிலாங்கூர் நீர் சுத்திகரிப்பு நிலையம் (எல்ஆர்ஏ எஸ்எஸ்பி1) பராமரிப்பு மற்றும் கருவிகளை மாற்றும் கட்டம் 1 நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும் மற்றும் அப்பணி மாலை 7 மணிக்கு முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பராமரிப்பு நடவடிக்கையால் பெட்டாலிங், கிள்ளான், ஷா ஆலம், கோம்பாக், கோலாலம்பூர், உலு சிலாங்கூர் மற்றும் கோலா சிலாங்கூர் ஆகிய இடங்களில் நீர் விநியோகத்தில் இடையூறு ஏற்படும்.

இதனால், மருத்துவமனைகள், கிளினிக்குகள், டயாலிசிஸ் மையங்கள் மற்றும் இறுதிச் சடங்கு மையங்கள் போன்ற முக்கியமான வளாகங்களுக்கு முன்னுரிமை அளித்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தண்ணீர் டேங்கர்களை ஆயர் சிலாங்கூர் அனுப்பும்.

“வணிக வாடிக்கையாளர்கள், பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள எந்த ஆயர் சிலாங்கூர் சேவை கவுண்டரில் சுத்திகரிக்கப்பட்ட நீர் விநியோகங்களை வாங்கலாம்.

“பிரமர் எஸ்டேட் (உலு லங்காட்), தாமான் கெமிலாங் டெங்கில் மற்றும் பெக்கான் சலாக் (சிப்பாங்) மற்றும் தாமான் பந்திங் பாரு (கோலா லங்காட்) ஆகிய இடங்களில் நீர் நிரப்பு நிலையங்கள் திறக்கப்படும் என முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.

ஜூன் 6 ஆம் தேதி அதிகாலை 3 மணி முதல், நீர் விநியோக முறை சீரான பிறகு, நுகர்வோர் படிப்படியாக நீரைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“பொதுமக்கள் போதுமான தண்ணீர் சேமித்து வைத்திருக்கவும், இடையூறு ஏற்படும் காலம் முழுவதும் தண்ணீரை கவனமாகப் பயன்படுத்தவும் ஆயர் சிலாங்கூர் அறிவுறுத்துகிறது.

மேல் தகவல்களுக்கு ஆயர் சிலாங்கூர் செயலி, முகநூல், இன்ஸ்டாகிராம் அல்லது https://www.airselangor.com/ ஐப் பார்வையிடவும். அதுமட்டுமில்லாமல், ஆயர் சிலாங்கூரை 15300 இல் தொடர்பு கொள்ளலாம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.