ஷா ஆலம், மே 16: சிலாங்கூர் குழந்தைகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய அங்கமாகக் கல்வி விளங்குகிறது. அதனை வழங்கும் ஆசிரியர்களின் நலன் பாதுகாக்கப் படுவதை உறுதி செய்வதில் மாநில அரசாங்கம் உறுதியாக உள்ளது.
மேலும், அல்-குரான் மற்றும் ஃபர்து ஐன் (கஃபா) ஆசிரியர்களின் உதவித்தொகை அதிகரிப்பு மற்றும் சமூக பாதுகாப்பு அமைப்பின் (சோக்சோ) பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு முயற்சிகள் முன் முயற்சிகள் எடுக்கப் படுவதாக டத்தோ மந்திரி புசார் கூறினார்.
மக்கள் கல்வித் திட்டம், பள்ளி உதவி மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் (PIBG) பங்களிப்புகள் ஆகியவை செயல்படுத்தப்படும் பிற நிகழ்ச்சி நிரல்களாகும் என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி விளக்கினார்.
"கல்வியாளர்களுக்கும் மாணவர்களுக்கும் உகந்த மற்றும் ஆரோக்கியமான கற்றல் சூழலை உருவாக்க ஒற்றுமை அரசாங்கம் பாடுபடுகிறது" என்று அவர் இன்று ஆசிரியர் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு முகநூலில் தெரிவித்தார்.
மாணவர்களுக்குக் கல்வி கற்பிப்பதில் சோர்வு இல்லாமல் கடினமாக உழைக்கும் அனைத்து போதனையாளர்களுக்கும் மந்திரி புசார் தனது ஆசிரியர் தின வாழ்த்துகளை தெரிவித்தார்.


