கோத்தா பாரு, மே 16: குவா முசாங் லோஜிங்கில் உள்ள பள்ளத்தாக்கில் சிமெண்ட் லாரி கவிழ்ந்ததில் 3 ஓராங் அஸ்லி ஆண்கள் இறந்தனர்.
மேலும், பாதிக்கப்பட்ட அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என கிளந்தான் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (ஜேபிபிஎம்) செய்தித் தொடர்பாளர் கூறினார்.
தீயணைப்புப் படைக்கு காலை 10.40 மணி அளவில் அவசர அழைப்பு வந்ததாகவும் மதியம் 12.41 மணிக்கு சம்பவ இடத்தை சென்று அடைந்ததாகவும் கூறினார்.
"குவா முசாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தை (பிபிபி) சேர்ந்த 10 பேர் பாதிக்கப்பட்ட மூன்று பேரையும் பள்ளத்தாக்கிலிருந்து வெளியே கொண்டு வர சம்பவம் நடந்த இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.
"பாதிக்கப்பட்ட அனைவரையும் வெளியே கொண்டு வரும் பணி நேற்று மதியம் 2.22 மணியளவில் நிறைவடைந்தது. மேலும், அவர்கள் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாகச் சுகாதார அமைச்சகம் (கேகேஎம்) ஊழியர்கள் உறுதிப்படுத்தினர்," என்று அவரை தொடர்பு கொண்டபோது கூறினார்.
பலியான மூன்று பேரின் உடல்களும் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காகக் குவா முசாங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டன.
– பெர்னாமா


