ECONOMY

நாட்டில் 1,995 டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன

15 மே 2024, 5:37 AM
நாட்டில் 1,995 டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன

புத்ராஜெயா, மே 14: கடந்த ஏப்ரல் 28 முதல் மே 4 வரை (18வது தொற்றுநோய் வாரம்) மொத்தம் 1,995 டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. முந்தைய வாரத்தில் 2,237 சம்பவங்கள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த காலகட்டத்தில் டிங்கி காய்ச்சல் சம்பவங்களால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று சுகாதார இயக்குநர் ஜெனரல் டத்தோ டாக்டர் முஹம்மது ராட்ஸி அபு ஹாசன் கூறினார்.

"டிங்கி காய்ச்சலால் 39 இறப்புகள் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 24 இறப்புகள் பதிவாகியுள்ளன," என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

ஹாட்ஸ்பாட் இடங்களின் எண்ணிக்கை முந்தைய வாரத்தில் 63 இடங்களுடன் ஒப்பிடும்போது தற்போது 70 இடங்களாகப் பதிவாகியுள்ளன. 

அவை சிலாங்கூரில் (55), கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவில் (6), பேராக் (3), பினாங்கு மற்றும் நெகிரி செம்பிலானில் தலா இரண்டு மற்றும் கெடா மற்றும் சரவாக்கில் தலா ஒன்று என டாக்டர் முஹம்மது ராட்ஸி கூறினார்.

 

– பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.