NATIONAL

பாழடைந்த அடுக்குமாடி குடியிருப்புகளை மறுசீரமைக்க மொத்தம் RM7 மில்லியன் ஒதுக்கீடு

14 மே 2024, 9:04 AM
பாழடைந்த அடுக்குமாடி குடியிருப்புகளை மறுசீரமைக்க மொத்தம் RM7 மில்லியன் ஒதுக்கீடு

ஷா ஆலம், மே 14: நலன்புரி மாநில மறுவாழ்வுத் திட்டம் (செரியா) மூலம் மாநிலம் முழுவதும் பழுதடைந்த அடுக்குமாடி குடியிருப்புகளை மறுசீரமைக்க மொத்தம் RM7 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

சிலாங்கூர் வீட்டு வசதி மற்றும் ரியல் எஸ்டேட் வாரியத்தின் (LPHS) மேற்பார்வையின் கீழ் உள்ள திட்டம் குறைந்த மற்றும் நடுத்தர விலை அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்று டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

"வீட்டின் தரம் சமூக நல்வாழ்வுக்கு பங்களிக்கிறது என்று மாநில அரசு நம்புகிறது. இந்த மாநிலத்தில் எந்த குடிமகனும் நலன்புரி முயற்சிகளில் இருந்து விலக்கப் படக்கூடாது என்பதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டது."

"ஆர்வமுள்ளவர்கள், selangorpenyayang.com ஐப் பார்வையிட பரிந்துரைக்கிறேன்," என்று அவர் இன்று X பக்கத்தில் தெரிவித்தார்.

பிப்ரவரி 24 அன்று, பாண்டன் இண்டாவை சுற்றியுள்ள குறைந்த விலை அடுக்குமாடி குடியிருப்புகளின் எட்டுத் தொகுதிகளை மறுசீரமைக்க ரிம1 மில்லியன் நிதியை அமிருடின் அறிவித்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.