NATIONAL

அரேபியப் பயணச் சந்தை மூலம் துபாயில் விற்பனைப் பணியை சிலாங்கூர் மேற்கொண்டது

14 மே 2024, 4:05 AM
அரேபியப் பயணச் சந்தை மூலம் துபாயில் விற்பனைப் பணியை சிலாங்கூர் மேற்கொண்டது

ஷா அலம், மே 14: இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும் புதிய ஒத்துழைப்புகளை ஆராயவும் மே 6 முதல் 9 வரை அரேபியப் பயணச் சந்தை மூலம் துபாயில் விற்பனைப் பணியை சிலாங்கூர் மேற்கொண்டது.

சுகாதார சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு KPJ ஹெல்த்கேர் மற்றும் விமானங்களில் இணைப்புக்காக ``AirArabia`` உடன் ஒத்துழைப்பதாக சுற்றுலா சிலாங்கூரின் தலைமை நிர்வாக அதிகாரி கூறினார்.

" புரோமோஷன் மற்றும் பிசினஸ்-டு-பிசினஸ் (B2B) அமர்வுகள் போன்ற கூட்டு முயற்சிகளுக்கு இந்த சினெர்ஜி வழி வகுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது சிலாங்கூரின் சுற்றுலாத் துறையை உலக அளவில் உயர்த்த முடியும்" என்று அஸ்ருல் ஷா முகமட் நேற்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

மேலும், 2022ல் 89,006ஆக இருந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை   கடந்த ஆண்டு 176,711ஆக (99 சதவீதம்) அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார்

சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமன் ஆகியவை மத்திய கிழக்கில் உள்ள முக்கிய பங்களிப்பாளர்கள் ஆகும். இது கடந்த ஆண்டு வருகையாளர்களில் 79.13 சதவீதமாக இருந்தது என்று அவர் விளக்கினார்.

இதற்கிடையில், சுபாங் ஜெயா மாநகராட்சி, சிப்பாங் நகராண்மை கழகம், அம்பாங் நகராண்மை கழகம், பெட்டாலிங் ஜெயா மாநகாராட்சி மற்றும் ஷா ஆலம் மாநகராட்சி ஆகிய ஐந்து பிபிடிகள் மத்திய கிழக்கு சுற்றுலா பயணிகளை அதிக எண்ணிக்கையில் பதிவு செய்துள்ளன.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.