NATIONAL

செமினியில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் உடனடி நடவடிக்கை

14 மே 2024, 2:28 AM
செமினியில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் உடனடி நடவடிக்கை

ஷா ஆலம், மே 14: ஜாலான் சுங்கை லாலாங், செமினியில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில்  சாலைப் பயன்படுத்துபவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு, மாநில அரசு ஒருங்கிணைப்பு மற்றும் உடனடி நடவடிக்கையை செயல்படுத்தி வருகிறது.

சாலை மூடல் தொடர்பான ஆரம்ப அறிவிப்பு சம்பவ இடத்திற்குச் செல்லும் சந்திப்பிலும் வைக்கப்பட்டுள்ளது என சிலாங்கூர் உள்கட்டமைப்பு மற்றும் வேளாண்மை ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹாசிம் தெரிவித்தார்.

சிலாங்கூர் பொதுப்பணித்துறை (ஜேகேஆர்) மற்றும் காஜாங் நகராண்மை கழகம் (எம்பிகேஜே) ஆகியவற்றுடன் சேர்ந்து மாநில உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் குழுவின் மூலம், தற்காலிக மாற்று சாலை உட்பட, அப்பகுதியில் செயல்படுத்தக்கூடிய பல ஆரம்ப நடவடிக்கைகளை அவரது தரப்பு அடையாளம் கண்டுள்ளதாகக் கூறினார்.

ஏதேனும் தகவல்கள் இருந்தால் அவ்வப்போது தெரிவிக்கப்படும் என்றார் இஷாம்.

– பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.