பாலிங், மே 13: நேற்று இரவு லத்தா பாயு நீர்வீழ்ச்சி பகுதியில் காணாமல் போன நபர் ஒருவர் இன்று காலை 11 மணியளவில் நீரில் மூழ்கி இறந்து கிடந்தார்.
குறிப்பிட்ட இடத்திலிருந்து 15 மீட்டர் தொலைவில் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (ஜேபிபிஎம்) நீச்சல் பிரிவால் பாதிக்கப்பட்ட 27 வயதான நபரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டதா கப் பாலிங் மாவட்ட காவல் துறைத் தலைவர் சூப்ட் ஷம்சுடின் மாமட் தெரிவித்தார்.
"பாதிக்கப் பட்டவர் நீச்சல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது நீரில் மூழ்கியதாக நம்பப்படுகிறது. ஏனெனில் அவரது உடல் கண்டு பிடிக்கப் பட்டபோது நீச்சல் முகக்கவரி அணியப் பட்டிருந்தது," என்று அவர் தெரிவித்தார்.
பலியானவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கூலிம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அவர் கூறினார்.
நேற்றிரவு 9 மணியளவில் பாதிக்கப்பட்டவர் காணாமல் போனது குறித்து பாதிக்கப்பட்டவரின் தந்தை காவல்துறையில் புகார் அளித்தார் என ஷம்சுடின் கூறினார்.
– பெர்னாமா


