NATIONAL

சுகாதார வசதிகளை  மேம்படுத்த 401 திட்டங்களுக்கு ரிம150 மில்லியன் ஒதுக்கீடு

13 மே 2024, 9:26 AM
சுகாதார வசதிகளை  மேம்படுத்த 401 திட்டங்களுக்கு ரிம150 மில்லியன் ஒதுக்கீடு

கோத்தா கினபாலு, மே 13 - நாடு முழுவதும் உள்ள கிளினிக்குகளை மேம்படுத்தவும், சுகாதார வசதிகளை வலுப்படுத்தவும் மொத்தம் 401 திட்டங்கள் நடப்பு ஆண்டில் நடைபெற்று வருவதாகவும், இதற்கு ரிம150 மில்லியன் செலவாகும் என சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி அஹ்மட் தெரிவித்தார்.

சபாவில் மட்டும், RM21.5 மில்லியன் செலவில் 55 திட்டங்கள் நடந்து வருவதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் என்றும் அவர் கூறினார்.

"இந்த திட்டங்களை விரைவில் முடிக்க நாங்கள் உறுதி பூண்டுள்ளோம்," என்று அவர் யுஎம்எஸ் பல்கலைக்கழக தேசிய அளவிலான உலக மலேரியா, காசநோய் மற்றும் தொழுநோய் தின கொண்டாட்டத்தை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்நிகழ்வில் சபா சுகாதார இயக்குனர் டத்தோ டாக்டர் அசிட்ஸ் சன்னாவும் கலந்து கொண்டார்.

- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.