NATIONAL

செவிலியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்ப்பதில் உறுதி

13 மே 2024, 8:22 AM
செவிலியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்ப்பதில் உறுதி

கோலாலம்பூர், மே 13 - நாட்டில் உள்ள செவிலியர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், குறிப்பாக அவர்களின் சம்பளம் மற்றும் நலன் சார்ந்த பிரச்சினைகளை தீர்ப்பதில் தனது உறுதிப்பாட்டை சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி அஹ்மட் வெளிப்படுத்தினார்.

சுகாதார அமைப்பு அனைவருக்கும் சீராக இயங்குவதை உறுதி செய்வதில் செவிலியர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர் என்பதை வலியுறுத்திய அவர், செவிலியர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகள் தீர்க்கப் படாதது குறித்து தனது ஆழமான புரிதலை வெளிப்படுத்தினார்.

சுகாதார அமைச்சர் என்ற வகையில், சம்பளம், கொடுப்பனவுகள், நலன்புரி மற்றும் அவர்களது தொழில்சார் கடமைகள் தொடர்பான பிரச்சனைகள் உட்பட அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை நான் புரிந்துகொள்கிறேன்.

சர்வதேச செவிலியர் தினம் மற்றும் புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்தநாளை நினைவு கூறும் முகநூல் பதிவில், "இந்தப் பிரச்சினைகளை தீர்ப்பதில் நான் உறுதியாக இருக்கிறேன், ஆனால் உங்கள் பொறுமையை எதிர்பார்க்கிறேன்" என்று அவர் கூறினார்.

மலேசியாவில் உள்ள அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கும், குறிப்பாக சுகாதார அமைச்சகத்தின் உள்ளவர்களுக்கும் டாக்டர் ஜூல்கிப்ளி தனது பாராட்டுகளைத் தெரிவித்ததுடன், அவர்களின் உன்னதப் பொறுப்புகளில் அவர்கள் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்தினார்.

மற்றொரு பதிவில், குறிப்பாக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களான தாய்மார்களுக்கு அவர் தனது அன்னையர் தின வாழ்த்துகளை தெரிவித்தார்.

"நீங்கள் உங்கள் குடும்பங்களை அன்புடனும் அக்கறையுடனும் கவனித்து கொள்வது மட்டுமல்லாமல், அனைத்து மலேசியர்களின் ஆரோக்கியத்தையும் பொறுமையுடன் பாதுகாக்கிறீர்கள், ”என்று அவர் கூறினார்.

- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.