NATIONAL

ஐந்தாம் படிவம் மாணவர் சுவர்  ஏறி வீட்டுக்குள் நுழைய முயன்ற போது தவறி விழுந்தார்

13 மே 2024, 7:27 AM
ஐந்தாம் படிவம் மாணவர் சுவர்  ஏறி வீட்டுக்குள் நுழைய முயன்ற போது தவறி விழுந்தார்

புத்ராஜெயா, மே 13: ஐந்தாம் படிவம் மாணவர் ஒருவர் தனது பூட்டிய வீட்டுக்குள் சுவரில் ஏறி நுழைய முயன்றபோது ஐந்தாவது மாடியிலிருந்து தவறி விழுந்து காயமடைந்தார்.

இச்சம்பவம் நேற்று பிற்பகல் 5.30 மணியளவில் மலேசிய அரசு ஊழியர் குடியிருப்பில் (பிபிஏஎம்) மெலின்ஜாவ் வீடு தொகுதி 11இல் நடந்ததாகப் புத்ராஜெயா மாவட்ட காவல்துறை தலைமை உதவி ஆணையர் ஏ அஸ்மாதி அப்துல் அஜீஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

“பாதிக்கப்பட்டவர் பலத்த மழை காரணமாக வீட்டின் பின் கதவின் பால்கனியில் ஏற முயன்று ஐந்தாவது மாடியிலிருந்து தவறி விழுந்தார்.

பாதிக்கப்பட்டவர் ஒரு காவல்துறை அதிகாரியின் மகன் ஆவார். அவர் தலையில் இரத்தப்போக்கு காரணமாக புத்ராஜெயா மருத்துவமனையில் மருத்துவர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவர் நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

- பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.