NATIONAL

போலி கடப்பிதழ் தயாரிப்பு கும்பல் முறியடிப்பு- வங்காளதேச ஆடவர் கைது

13 மே 2024, 6:50 AM
போலி கடப்பிதழ் தயாரிப்பு கும்பல் முறியடிப்பு- வங்காளதேச ஆடவர் கைது

புத்ராஜெயா, மே 13- கடந்த ஈராண்டுகளாக போலி கடப்பிதழ்களைத்

தயாரிப்பது மற்றும் அசல் கடப்பிதழ்களில் மாற்றங்களைச் செய்வது

போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த ‘ஓஃபு பாய்‘ கும்பலை

குடிநுழைவுத் துறை முறியடித்துள்ளது.

இம்மாதம் 10ஆம் தேதி மாலை 4.14 மணியளவில் காஜாங்கில் உள்ள

வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையில் இக்கும்பலின்

மூளையாகச் செயல்பட்டு வந்த ‘ஓஃபு பாய்‘ என அழைக்கப்படும் 38

வங்காளதேச ஆடவரும் அவரின் வலது கரமான 40 வயது பிலிப்பினோ

மாதுவும் கைது செய்யப்பட்டதாக மலேசிய குடிநுழைவுத் துறையின்

தலைமை இயக்குநர் டத்தோ ருஸ்லின் ஜூசோ கூறினார்.

அதிகாரிகளுக்கு குழப்பம் ஏற்படும் வகையில் செல்லுபடியாகும் தேதி

காலாவதியான கடப்பிதழ்களில் விபரங்களை மாற்றும் நடவடிக்கையில்

ஈடுபட்டு வந்த இக்கும்பல் ஒவ்வொரு கடப்பிதழுக்கும் 1,000 வெள்ளி

முதல் 1,500 வெள்ளி வரை கட்டணம் வசூலித்து வந்துள்ளது என

சொன்னார்.

மேலும், ஃபொமேமா எனப்படும் அந்நியத் தொழிலாளர் மருத்துவ

சோதனை மற்றும் கண்காணிப்பு அமைப்பின் அனுமதியை பெறுவதற்காக

சம்பந்தப்பட்ட கடப்பிதழ்களில் போலி தகவல்களை சேர்க்கும் செயலிலும்

இக்கும்பல் ஈடுபட்டு வந்துள்ளது. இச்சேவைக்கு ஒவ்வொரு

கடப்பிதழுக்கும் 1,000 வெள்ளி முதல் 1,600 வெள்ளி வரை கட்டணம்

பெறப்பட்டுள்ளது என்றார் அவர்.

அந்த வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 199 வங்காளதேச

கடப்பிதழ்கள், நான்கு இந்திய கடப்பிதழ்கள், மூன்று பிலிப்பைன்ஸ்

கடப்பிதழ்கள், மூன்று மியன்மார் கடப்பிதழ்கள் மற்றும் இரண்டு

இந்தோனேசிய கடப்பிதழ்கள் உள்பட மொத்தம் 211 கடப்பிதழ்கள்

பறிமுதல் செய்யப்பட்டன என்றும் அவ குறிப்பிட்டார்.

மேலும், கடப்பிதழின் முன்பக்கத்தில் உள்ள சுயவிவரக் குறிப்பு கொண்ட

31, பிரதிதிகள், 144 ஃபொமேமா ஆவணங்கள், போலி ஆவணங்கள்

செய்வதற்குப் பயன்படும் பல்வேறு உபகரணங்கள், 16,000 வெள்ளி ரொக்கம்

ஆகியவையும் அவ்வீட்டில் கைப்பற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.