NATIONAL

பாங் சோக் தாவ் தனது பணியின் தொடக்கமாக ராசா மக்களை பசாரில் சந்தித்தார்

13 மே 2024, 4:55 AM
பாங் சோக் தாவ் தனது பணியின் தொடக்கமாக ராசா மக்களை பசாரில் சந்தித்தார்

உலு சிலாங்கூர், மே 13: நேற்று கோல குபு பாரு தொகுதியின் புதிய சட்டமன்ற உறுப்பினராகத் தனது பணியை பசார் ராசா வில் உள்ள சமூகத்தை சந்தித்தன் மூலம் பாங் சோக் தாவ் தொடங்கினார்.

அவ்விடத்திற்குப் பாங் (31) தனது கணவர் யாப் பிங் யூ (32) உடன் காலை 9 மணிக்கு வந்ததை அங்கிருந்த கூட்டத்தினர் வரவேற்றனர்.

சந்தையில் உள்ள பெண்களுக்கு அன்னையர் தினத்தை முன்னிட்டு பூக்களை வழங்கவும், தனது பாராட்டுகளைத் தெரிவிக்கவும் கிட்டத்தட்ட அரை மணி நேரம் செலவிட்டார்.

பின்னர் அவர் கோல குபு பாரு பொது சந்தைக்குச் சென்று சமூகத்தை சந்தித்து நன்றி கூறினார்.

இத்தொகுதி மக்களுக்கு சேவை செய்வதற்காக தனது உற்சாகத்தை வெளிப் படுத்தியதோடு, மாநில சட்டமன்ற உறுப்பினர் சேவை மையம் நாளை திறக்கப்படும் என்று செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறினார்.

"தெரு விளக்குகள் மற்றும் வடிகால்கள் போன்ற உள்ளூர் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளிப்பேன். உள்ளூர் பிரச்சனைகளை முதலில் தீர்க்க உலு சிலாங்கூர் நகராண்மை கழகத்துடன் இணைந்து பணியாற்றுவேன்.

தேர்தல் கொள்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளபடி இணையத்தின் வேகம் மற்றும் கவரேஜை அதிகரிக்கவும், வார இறுதி நாட்களில் சுற்றுலா பேருந்துவரத்தை ஊக்குவிப்பதோடு போக்குவரத்து முறையையும் மேம்படுத்த பாடுபடுவேன் என்றார்.

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.