ஷா ஆலம், மே 12: சிலாங்கூர் எஃப்சி வீரர் ஃபைசல் ஹலீம், மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வந்தாலும், அவர் இன்னும் உற்சாகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
தோல் மாற்று அறுவை சிகிச்சைக்கு (தோல் அலோகிராஃப்ட்) உட்படுத்தப்பட்ட பிறகு கண்காணிப்பு காலத்தில் பார்வையாளர்கள் அவரைச் சந்திக்க அனுமதி இல்லை என விளையாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார். .
"ஃபைசல் இன்னும் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டுள்ளார் மற்றும் நல்ல நிலையில் இருக்கிறார், ஆனால் அடுத்த இரண்டு வாரங்கள் மிகவும் முக்கியமானவை, காரணம் இந்தத் தோல் அறுவை சிகிச்சைக்கு மருத்துவக் குழுவின் நெருக்கமான மற்றும் கடுமையான கண்காணிப்புடன் ஃபைசல் ஹலீம் தனிமைப்படுத்தப்பட வேண்டும்" என்று நஜ்வான் ஹலிமி கூறினார்.
பெல்ஜியத்திலிருந்து 30,000 ரிங்கிட் மதிப்புள்ள சிகிச்சை முறை சம்பந்தப்பட்ட விளையாட்டு வீரரை விரைவாக மீட்க உதவும் என்று டாக்டர் முஹம்மது ஹஸ்வான் கைர் விளக்கினார்.


