NATIONAL

ரஹ்மா அல்லது சாரா உதவி திட்டங்களின் ஏமாற்று சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்

12 மே 2024, 4:23 AM
ரஹ்மா அல்லது சாரா உதவி திட்டங்களின் ஏமாற்று சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்

புத்ராஜெயா, 10 மே: ரஹ்மா அல்லது சாரா உதவி திட்டங்களின் அதிகாரப்பூர்வ தளத்தில் பொறுப்பற்ற சில தரப்பினர்

பெரிய தொகையை செலுத்த கோரும் சம்பவங்களில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு நிதி அமைச்சகம் அறிவுறுத்துகிறது.

இதுபோன்ற அழைப்புகள் வந்தால் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்வதாக நிதி அமைச்சகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

"நிதி அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ தொலைபேசி எண்ணைப் பயன்படுத்த மூன்றாம் தரப்பினருக்கு அனுமதி இல்லை" என்று அந்த அறிக்கை கூறுகிறது.

நிதி அமைச்சு அதிகாரிகள் எந்த ஒரு நோக்கத்திற்காகவும் பொதுமக்களிடமிருந்து பணம் வசூலிக்க அனுமதிக்கப்படுவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த உதவி திட்டங்கள் தொடர்பான ஏதேனும் சந்தேகங்களுக்கு  03-8882 4565/4566 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.