கோலாலம்பூர், மே 12: கோல குபு பாரு தொகுதியின் இடைத்தேர்தலில் பாங் சோக் தாவோவின் வெற்றி, ஒற்றுமை அரசாங்கத்தின் ஒத்துழைப்பு வலுவாக இருப்பதையும், மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது என்பதையும் நிரூபிக்கிறது.
பக்காத்தான் ஹராப்பானுக்குச் சொந்தமான இடத்தை பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்துடன் பாக் சோக் தக்க வைத்துக் கொண்டார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் கூறினார்.
ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள கட்சிகளுக்கிடையிலான ஒத்துழைப்பு மிகவும் வலுவாக இருந்ததையும், பிரச்சாரக் காலம் முழுவதும் தனித்து நின்றதையும் இந்த வெற்றி நிரூபித்துள்ளது என்றார்.
"இந்த வெற்றி மிகவும் உறுதியானது, ஏனென்றால் நாங்கள் வாக்காளர்களின் ஆதரவைத் தக்க வைத்துக் கொண்டுள்ளோம் மற்றும் பல்வேறு இனங்கள் மற்றும் சமூகங்கள் ஆதரவிலும் அதிகரிப்பும் கிடைத்துள்ளது என்றார்.
"இது ஒற்றுமை அரசாங்கத்திற்கு கிடைத்த சிறப்பான வெற்றியாகும் என நேற்றிரவு செந்தூல் டிப்போவில் நடைபெற்ற பிகேஆரின் 25வது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
– பெர்னாமா


