ECONOMY

எங்களோடு இணைந்திருங்கள் உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம் பாப்பா ராய்டு அழைப்பு

10 மே 2024, 4:25 PM
எங்களோடு இணைந்திருங்கள் உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம் பாப்பா ராய்டு அழைப்பு

செய்தி. சு.சுப்பையா

கோல குபு பாரு மே.9- கோல குபு பாரு இந்திய வாக்காளர்களே கடந்த காலங்களைப் போல் தொடர்ந்து எங்களோடு இணைந்து இருங்கள். உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம் என்று சிலாங்கூர் மாநில அரசு ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு அழைப்பு விடுத்தார்.

கோல குபு பாருவில் பிரசித்தி பெற்ற வாகனம் ஓட்டும் பள்ளி பி.எஸ்.சாமி பள்ளியாகும். இப்பள்ளி உரிமையாளர் பி.எஸ். சாமி இவ் வட்டாரத்தில் மிகவும் செல்வாக்குடன் இருக்கிறார். அவரது வாகனம் ஓட்டும் பள்ளியில் ராமா மெஸ்ரா திட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சுற்றுலா துறை அமைச்சர் வருகை தந்தார்.

இவ் வட்டாரத்தில் உள்ள இந்து இடுகாட்டில் நிர்வாண நிறுவனம் முழு செலவில் நவீன மின் சுடலை கட்டித் தரப்படும் என்று அவர் அறிவிப்பதற்கு முன்னர் பாப்பா ராய்டு உரை யாற்றினார்.

சிலாங்கூர் மாநில அரசு என்றுமே இந்தியர்களை கை விட்டது இல்லை. இந்தியர்களின் நலனில் அதிக முக்கியத்துவம் கொடுத்த அரசு நமது மாநில அரசு. குழந்தை பிறந்தது முதல், கல்வி கற்க பள்ளிக்கு செல்வது பின்னர் இறப்பு வரை மாநில மக்களுக்கு சிறப்பாக சேவையாற்றி வருகிறது.

கடந்த மாநில தேர்தல் வரை சிலாங்கூர் இந்தியர்கள் நமக்கு வற்றாத ஆதரவை கொடுத்து வந்தனர். தற்போது வாக்களிக்க வேண்டாம் என்று ஒரு சிலர் விசம பிரச்சாரம் செய்து வருகின்றனர். அவர்கள் புறந்தள்ளி விட்டு திரளாக வருகை தந்து வாக்களித்து நம்பிக்கை கூட்டணியின் வேட்பாளரை வெற்றி பெற செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

மாலையில் தற்போது மழை வருகிறது. ஆகவே இந்திய வாக்காளர்கள் காலையில் சென்று வாக்களித்து விடுங்கள். ஜனநாயகம் வழங்கிய உங்களது வாக்குரிமையை நிறைவேற்றுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

இத்தேர்தலில் 2 ஆம் எண்ணில் போட்டியிடும் நம்பிக்கை கூட்டணியின் வேட்பாளர் புவான் பாங்கிற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

பி.எஸ்.சாமியின் இவ் வட்டார சேவையை வெகுவாக  பாராட்டினார்.இந்நிகழ்ச்சியில் அவருடன் ஐ.பி.எப். கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ லோகநாதன், உலு சிலாங்கூர் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்திய பிரகாஸ்,  இத்தொகுதியின் பி கேஆர் அம்னோ  தலைவர்கள் திரளாக கலந்துக் கொண்டனர்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.