NATIONAL

மேலவை சபாநாயகர் முதாங் தகால் காலமானார்

10 மே 2024, 9:52 AM
மேலவை சபாநாயகர் முதாங் தகால் காலமானார்

கோலாலம்பூர், மே 10 - மேலவை (டேவான் நெகாரா) தலைவர் டத்தோ முதாங் தகால் இன்று காலை 11.46 மணியளவில் தேசிய இதய சிகிச்சைக் கழகத்தில்  (ஐ.ஜே.என்.) காலமானார். அவருக்கு வயது 69 ஆகும்.

இத்தகவலை  டேவான் நெகாரா தலைவர்  அலுவலகம் ஒரு அறிக்கையில் உறுதி செய்துள்ளது.

முன்னாள் புக்கிட் மாஸ்  நாடாளுமன்ற உறுப்பினருமான முதாங்கின்  இறுதிச் சடங்கு மற்றும்  பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு  பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

இந்த கடினமான நேரத்தில் தங்களுக்கு  இரங்கல் தெரிவித்த,  பிரார்த்தனைகள் செய்த மற்றும் ஆதரவு வழங்கிய அனைவருக்கும் மறைந்த முதாங்கின் குடும்பத்தினர் தங்களின் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்க விரும்புகின்றனர் என்று அந்த அலுவலகம்  கூறியது.

மறைந்த முதாங்கிற்கு  மனைவி டத்தின் ஹோ மே லெங் மற்றும் மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி அஜர்பைஜானுக்கு பணி நிமித்தப் பயணம் மேற்கொண்ட அவர்  திட்டமிட்டதை விட முன்னதாக அதாவது  மே 6 ஆம் தேதி தாயகம் திரும்பி ஐ.ஜே.என்.னில் சிகிச்சை பெறத் தொடங்கினார்.

கடந்த மே 1 முதல் மே 3 வரை பாகுவில் நடைபெற்ற கலாச்சார கலந்துரையாடல் தொடர்பான உலக ஆய்வரங்கில்  கலந்து கொண்ட  மலேசிய தூதுக்குழுவிற்கு முதாங் தலைமை தாங்கினார்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.