NATIONAL

எரி திராவகம் வீசிய சந்தேகநபரின் கைரேகைகள் கண்டுபிடிப்பு

10 மே 2024, 7:04 AM
எரி திராவகம் வீசிய சந்தேகநபரின் கைரேகைகள் கண்டுபிடிப்பு

கோலாலம்பூர், மே 10: தேசிய கால்பந்து வீரர் ஃபைசல் ஹலீம் மீது எரி திராவகம் வீசிய சந்தேகநபரின் கைரேகைகள் அருகில் உள்ள ஷோப்பிங் சென்டரின் பல பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டன.

சிசிடிவி கேமராவை சோதனை செய்ததில் சந்தேக நபர் ஷாப்பிங் சென்டர் சுற்றியுள்ள பல பகுதிகளை தொட்டதைக் கண்டறிந்ததாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் (ஜேஎஸ்ஜே) இயக்குநர் டத்தோஸ்ரீ முகமட் ஷுஹைலி முகமட் ஜைன் கூறினார்

"நாங்கள் ஏற்கனவே அங்கு இருந்த சில கைரேகைகளை அடையாளம் கண்டுள்ளோம். இந்த கைரேகைகளின் பகுப்பாய்விற்கு நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம்" என்று அவர் கூறினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் கோத்தா டாமன்சாரா, பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஒரு முக்கிய ஷோப்பிங் சென்டரில் ஃபைசல் மீது எரிதிராவகம் வீசப்பட்டது.

அச்சம்பவத்தில் ஃபைசலின் உடல் மற்றும் முகத்தில் நான்காவது டிகிரி தீக்காயம் ஏற்பட்டது.

"போர்ட்டல் ஒன்றில் தெரிவிக்கப்பட்ட புதிய கைது நடவடிக்கையை நான் மறுக்கிறேன். உண்மையான அறிக்கைகள் எங்களால் மட்டுமே வெளியிடப்படுகின்றன.

"நாங்கள்தான் விசாரிக்கிறோம், கைது நடந்தால் பகிர்ந்து கொள்கிறேன்" என்றார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.