NATIONAL

கடல் அலை உயர்வு குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்

10 மே 2024, 3:37 AM
கடல் அலை உயர்வு குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்

ஷா ஆலம், மே 10: இன்று போர்ட் கிள்ளான் பகுதியில் ஏற்படும்  கடலலை உயர்வு குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இன்று இரவு 7.29 மணியளவில் கடல் மட்ட அளவானது 5.1 மீட்டராக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது எனசிலாங்கூர் நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை தெரிவித்துள்ளது.

முன்னதாக, , உயர் அலைகளின் நிகழ்வு நாட்டில்  பல பகுதிகளில் திடீர் வெள்ளம்  ஏற்படுத்தலாம் என்று தேசிய ஹைட்ரோகிராபிக் மையம் தெரிவித்தது.

கடலோர பகுதிகளுக்கு அருகில் வசிப்பவர்கள் இந்த நிகழ்வை எதிர்கொள்வதில் அதிக விழிப்புடன் இருக்கவும், தற்போதைய வானிலை நிலையை தொடர்ந்து கண்காணிக்கவும், பாதுகாப்புத் தகவல்களுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களைத் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.