NATIONAL

மோனோ ரயில் சேவை முழு செயல்பாட்டுக்கு திரும்பியது

10 மே 2024, 2:44 AM
மோனோ ரயில் சேவை முழு செயல்பாட்டுக்கு திரும்பியது

கோலாலம்பூர், மே 10: புக்கிட் நானாஸ் மோனோ ரயில் நிலையம் அருகே மரம் விழுந்த சம்பவத்தில் தற்காலியமாக நிறுத்தப்பட்ட மோனோ ரயில் சேவை முழு செயல்பாட்டுக்கு திரும்பியது.

அதனால், மாற்று ரயில் மற்றும் இடைநிலை பேருந்து சேவைகள் நிறுத்தப் பட்டுள்ளதாக ரேபிட் ரயில் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேபிட் ரயில் மற்றும் உள்ளூர் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட துப்புரவு மற்றும் பழுதுபார்ப்பு பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

"ஓடுபாதை அமைப்பு நிலையானது மற்றும் செயல்பட பாதுகாப்பானது என்பதை உறுதி செய்வதற்காகக் கட்டமைப்பு பொறியியலாளர் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டனர்.

இச்சம்வத்தில் உள்ளூர் நபர் ஒருவர் இறந்தார் மற்றும் மேலும் இருவர் காயமடைந்தனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.