NATIONAL

மரம் விழுந்த சம்பவத்தில் காயமடைந்த இருவரில் ஒருவர் மருத்துவமனையில் இருந்து வெளியேற அனுமதி

8 மே 2024, 10:01 AM
மரம் விழுந்த சம்பவத்தில் காயமடைந்த இருவரில் ஒருவர் மருத்துவமனையில் இருந்து வெளியேற அனுமதி

கோலாலம்பூர், மே 8: நேற்று ஜாலான் சுல்தான் இஸ்மாயிலில் மரம் விழுந்த சம்பவத்தில் காயமடைந்த இருவரில் ஒருவர் இன்று காலை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இ-ஹெய்லிங் ஓட்டுனர் (26 வயது ஆடவர்) காலை 6 மணிக்கு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்ய அனுமதிக்கப்பட்டார். அதே நேரத்தில் அவரது பயணியான 72 வயதான ஸ்வீடன் பெண் கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என டாங் வாங்கி மாவட்ட காவல்துறை துணைத் தலைவர் நஸ்ரோன் அப்துட் யூசோவ் கூறினார்.

“இந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது,” என்று அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், கனமழை மற்றும் பலத்த காற்றின் போது பிற்பகல் 2.19 மணியளவில் நடந்ததாக நம்பப்படும் இச்சம்பவத்தால் வாகனச் சேதம் குறித்து இதுவரை 18 புகார்கள் காவல்துறைக்குக் கிடைத்துள்ளதாக நஸ்ரோன் கூறினார்.

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.