NATIONAL

ஃபைசல் ஹலிம் இரண்டாவது அறுவை சிகிச்சை முடிந்து, சீரான நிலையில் உள்ளார்

8 மே 2024, 8:09 AM
ஃபைசல் ஹலிம் இரண்டாவது அறுவை சிகிச்சை முடிந்து, சீரான நிலையில் உள்ளார்

ஷா ஆலம், மே 8: ஷா ஆலமில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தேசியக் காற்பந்து வீரர் ஃபைசல் ஹலிம், இரண்டாவது அறுவை சிகிச்சை முடிந்து, சீரான நிலையில் உள்ளார்.

"சிறிது நேரத்திற்கு முன்பு நான் சிலாங்கூர் எஃப்சியை தொடர்பு கொண்டேன், ஃபைசல் பாதுகாப்பாக இரண்டாவது அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகவும், அவர் சீரான நிலையில் இருப்பதாகவும் விளையாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் நஜ்வான் ஹலிமி தெரிவித்தார்.

அவர் நேற்று பிரதமரின் அரசியல் செயலாளர் அஹ்மட் ஃபர்ஹான் பௌசியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள ஃபைசல் ஹலிமை சந்தித்தார்.

ஃபைசல் விரைவில் குணமடைய அனைத்து தரப்பினரின் பிரார்த்தனை தேவை என கோத்தா அங்கெரிக் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், முகநூல் மூலம் ஃபைசல் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

" ஃபைசல் ஹலீமுக்கு எதிரான வன்முறையைக் கடுமையாகக் கண்டித்து, அவர் பூரண குணமடைய ஆதரவையும் பிரார்த்தனைகளையும் செய்ய சிலாங்கூர் மக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டிய நேரம் இது. இது போன்ற இழிவான செயலுக்க்ச் சிலாங்கூரில் இடமில்லை," என்று அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.