NATIONAL

ஊழல் காரணமாகக் கடந்ந 2018 முதல் மலேசியாவுக்கு  27,700 கோடி வெள்ளி இழப்பு

7 மே 2024, 9:20 AM
ஊழல் காரணமாகக் கடந்ந 2018 முதல் மலேசியாவுக்கு  27,700 கோடி வெள்ளி இழப்பு

புத்ராஜெயா, மே 7 - ஊழல் காரணமாகக் கடந்த 5 ஆண்டுகளில்  நாட்டிற்கு 27,700 கோடி வெள்ளி  இழப்பு ஏற்பட்டுள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி)    தெரிவித்தது.

கடந்த 2018 முதல் கடந்த ஆண்டு வரையிலான ஐந்தாண்டு காலப்பகுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஒட்டுமொத்த மதிப்பீட்டின் அடிப்படையில் இழப்புகள் கணக்கிடப்பட்டதாக  எம்.ஏ.சி.சி. தலைவர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி  கூறினார்.

இந்த கணிசமான தொகையானது பல்வேறு வழிகளில் குறிப்பாக மருத்துவமனை மற்றும் பள்ளி பழுதுபார்ப்பு போன்ற சமூக திட்டங்களை செயல்படுத்துவதில் பொதுமக்களுக்கு  பயன்படுத்தப்பட்டிருக்கலாம். . துரதிர்ஷ்டவசமாக, ஊழல் நடவடிக்கைகளால்  இந்த தொகை  கரைந்து போய்விட்டது என்று அவர் இன்று புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 2024-2028 தேசிய ஊழல் எதிர்ப்பு வியூகத் திட்டத்தின்  தொடக்க நிகழ்வில் (என்.ஏ.சி.எஸ்.)  கூறினார்.

இந்த திட்டத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அநிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார். துணைப் பிரதமர்களான டத்தோஸ்ரீ டாக்டர் அகமது ஜாஹிட் ஹமிடி,  டத்தோஸ்ரீ பாடில்லா யூசோப் மற்றும் அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமட் ஸூக்கி அலி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இத்த என்.ஏ.சி.எஸ்.  குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவதை உறுதி செய்வதற்காக, நாட்டில் ஊழலால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளை அடையாளம் காண பல்வேறு அணுகுமுறைகள் மற்றும் வழிமுறைகளைப் பயன்படுத்தி இத்திட்டம்  வரையப்பட்டது என்று அஸாம் கூறினார்.

மலேசியாவில் அரசியல், பொது நிர்வாகம், அரசு கொள்முதல், சட்ட அமலாக்கம், சட்ட மற்றும் நீதித்துறை நிறுவனங்கள், தனியார் துறை மற்றும் பொதுமக்கள் உட்பட பல்வேறு துறைகளில் ஒருமைப்பாடு, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் ஒரு முக்கியமான வியூகத்தை என்ஏ.சி எஸ்.  கோடிட்டுக் காட்டுகிறது என்றார் அவர்.

இது ஐந்து முக்கிய வியூகங்கள்  மற்றும் 60 துணை வியூகங்களை  உள்ளடக்கியுள்ளது. இது இந்த ஆண்டு முதல் 2028 வரை ஐந்தாண்டு காலத்தில் செயல்படுத்தப்படும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.