NATIONAL

தேசியக் கால்பந்து வீரர் மீது எரி திராவக வீச்சு வழக்கில் மற்றொரு சந்தேக நபர் கைது

7 மே 2024, 6:16 AM
தேசியக் கால்பந்து வீரர் மீது எரி திராவக வீச்சு வழக்கில் மற்றொரு சந்தேக நபர் கைது

ஷா ஆலம், மே 7: தேசியக் கால்பந்து வீரர் ஃபைசால் அப்துல் ஹலிம் மீதான எரி திராவக வீச்சு வழக்கில் மற்றொரு சந்தேக நபரை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.

அந்த உள்ளூர் நபர் நேற்று பிற்பகல் பண்டார் பாரு பாங்கியில் கைது செய்யப் பட்டதாகச் சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசைன் ஓமர் கான் தெரிவித்தார்.

"சந்தேக நபர் இன்று காலை பெட்டாலிங் ஜெயா நீதிமன்றத்தில் விசாரணைக்கு தடுத்து வைக்கப் படுவார்," என்று பெரித்தா ஹரியான் தகவல் வெளியிட்டது.

தாக்குதலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் முதல் சந்தேக நபர் (20) பாண்டன் இண்டா, அம்பாங்கில் கைது செய்யப்பட்டார்.

அச் சந்தேக நபர் விசாரணைக்கு உதவுவதற்காக நேற்று முதல் இரண்டு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.