NATIONAL

கால்பந்து விளையாட்டாளர் ஃபைசால் மீது எரிதிராவகம் வீச்சு- சந்தேக நபர் கைது

6 மே 2024, 7:48 AM
கால்பந்து விளையாட்டாளர் ஃபைசால் மீது எரிதிராவகம் வீச்சு- சந்தேக நபர் கைது

ஷா ஆலம், மே 6- சிலாங்கூர் எஃப்.சி. கால்பந்தாட்ட வீரர் ஃபைசால்

ஹலிம் மீது எரிதிராவகம் வீசியதாக சந்தேகிக்கப்படும் நபரை போலீசார்

கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் இருபது வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் கைது

செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திய சிலாங்கூர் மாநில போலீஸ்

தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் கான், அந்நபரை தடுப்புக் காவலில்

வைப்பதற்கான நீதிமன்ற ஆணை இன்று பெறப்படும் என்றார்.

இந்த தாக்குதல் தொடர்பில் ஃபைசால் உள்பட மூவரிடம் நாங்கள்

வாக்குமூலம் பதிவு செய்துள்ளோம். இந்த விசாரணைக்கு உதவ மேலும்

சிலரை அழைக்கவுள்ளோம். இச்சம்பவத்திற்கான காரணம் இன்னம்

விசாரணையில் உள்ளது என அவர் குறிப்பிட்டார்.

ஃபைசால் மீது நேற்று கோத்தா டாமன்சாராவிலுள்ள பேரங்காடியில்

எரிதிராவக வீச்சு நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் அவர் கழுத்து,

தோள்பட்டை, கை மற்றும் நெஞ்சில் காயங்களுக்கள்ளானார்.

எரிதிராவ வீச்சினால் உடலின் பல பாகங்களில் தோல் வெந்த நிலையில்

அவர் பெட்டாலிங் ஜெயாவிலுள்ள தனியார் மருத்துவமனையில்

சிகிச்சைப் பெற்று வருகிறார். அவரின் உடல் நிலை சீராக உள்ளதாக

அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.