NATIONAL

தேசிய கால்பந்தாட்ட வீரர் ஃபைசால் மீது எரிதிராக வீச்சு- விசாரணைக்கு உதவ போலீசார் கோரிக்கை

6 மே 2024, 4:57 AM
தேசிய கால்பந்தாட்ட வீரர் ஃபைசால் மீது எரிதிராக வீச்சு- விசாரணைக்கு உதவ போலீசார் கோரிக்கை

கோலாலம்பூர், மே 6- தேசிய கால்பந்து விளையாட்டாளர் ஃபைசால்

ஹலிம் எரிதிராவக வீச்சுக்கு ஆளானார். இச்சம்பவம் கோத்தா

டாமன்சாராவிலுள்ள பேரங்காடி ஒன்றில் நேற்று மாலை நிகழ்ந்தது.

பெட்டாலிங் ஜெயாவிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை

பெற்று வரும் ஃபைசாலின் உடல் நிலை தற்போது சீராக உள்ளதாக

கூறப்படுகிறது.

இந்த எரிதிராவக வீச்சு தொடர்பில் நேற்று மாலை 5.51 மணியளவில்

தாங்கள் புகாரைப் பெற்றதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர்

டத்தோ ஹூசேன் ஓமார் கான் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பில் தகவலறிந்தவர்கள் 03-79662222 என்ற எண்களில்

பெட்டாலிங் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் நடவடிக்கை

அறையைத் தொடர்பு கொள்ளுமாறு அவர் அறிக்கை ஒன்றில் கேட்டுக்

கொண்டார்.

சிலாங்கூர் எஃப்.சி. விளையாட்டாளருமான ஃபைசால் எரிதிராவக வீச்சுக்கு

ஆளாகி காயங்களுடன் அமர்ந்திருக்கும் புகைப்படம் முன்னதாக சமூக

ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டது.

அந்த பேரங்காடியில் கோ-கார்ட் விளையாட்டில் கலந்து கொண்டப் பின்னர்

அவர் மீது எரிதிராக வீச்சு நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.