NATIONAL

உள்ளூர்வாசிகளின் நல்ல ஆதரவால் ஒற்றுமை அரசாங்க வேட்பாளர் உற்சாகமாக உள்ளார்

3 மே 2024, 8:56 AM
உள்ளூர்வாசிகளின் நல்ல ஆதரவால் ஒற்றுமை அரசாங்க வேட்பாளர் உற்சாகமாக உள்ளார்

உலு சிலாங்கூர், மே 3: உள்ளூர்வாசிகளின் நல்ல ஆதரவை தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப் பட்டுள்ள ஒற்றுமை அரசாங்க வேட்பாளரின் உற்சாகம் மேலும் அதிகரித்து வருகிறது.

ஓசிஸ் பத்தாங் காலியில் ஏழாவது நாள் பிரச்சாரத்தைத் தொடங்கிய பாங் சோக் தாவ், “லிட்டில் டேய்” மழலையர் பள்ளியில் கிட்டத்தட்ட 50 மாணவர்கள் மற்றும்  பெற்றோருடன்  சந்தித்து  கலந்துரையாடினார்.

பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் இயோ பீ இன் மற்றும் பாரிசான் நேஷனல் உலு சிலாங்கூர் தலைவர் டத்தோ முகமட் இசா அபு காசிம் ஆகியோருடன் இணைந்து அம்மாணவர்களுடன் ஏரோபிக்ஸ் நடவடிக்கையையும் மேற்கொண்டார்.

கோலா குபு பாரு தொகுதியில் பிரச்சாரக் காலம் முழுவதும் முடிந்தவரை அதிகமான குடியிருப்பாளர்களைச் சந்திக்க  விரும்புவதாகப் பாங் சோக் தாவ் நிருபர்கள் சந்தித்தபோது கூறினார்.

"ஒவ்வொரு நாளும் சுறுசுறுப்பாக இருக்க, நான் சத்தான உணவு மற்றும் வைட்டமின்கள் போன்ற கூடுதல் பொருட்களை உட்கொள்கிறேன். மேலும், நீரை அதிகமாகக் குடிப்பேன்," என்று அவர் கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.