NATIONAL

கால்வாயில் விழுந்த ஒன்பது வயது சிறுவன் மரணம்

2 மே 2024, 3:55 AM
கால்வாயில் விழுந்த ஒன்பது வயது சிறுவன் மரணம்

ஷா ஆலம், மே 1: நேற்று தாமான் புக்கிட் ரவாங் ஜெயா, ரவாங்கில் உள்ள கால்வாயில் விழுந்து ஒன்பது வயது சிறுவன் நீரில் மூழ்கி இறந்தான்.

அச்சிறுவன் விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்ட இடத்திலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாகக் சிலாங்கூர் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுப் பிரிவின் உதவி இயக்குநர் அஹ்மட் முக்லிஸ் முக்தார் கூறினார்.

இச்சம்பவம் தொடர்பாக மாலை 5.28 மணிக்கு தனது தரப்புக்கு அழைப்பு வந்ததாகவும், ரவாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து எட்டு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் அவர் கூறினார்.

"அச்சிறுவனின் உடல் மேல் நடவடிக்கைக்காகக் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது," என்று அவர் தெரிவித்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.