NATIONAL

மரம் விழுந்த சம்பவத்தில் உடன்பிறப்புகள் காயம்

2 மே 2024, 2:28 AM
மரம் விழுந்த சம்பவத்தில் உடன்பிறப்புகள் காயம்

ஈப்போ, மே 2: நேற்று செலாமா அருகே ஜாலான் மெந்திரியில் மரம் ஒன்று வீடு மற்றும்

வாகனம் மீது விழுந்த சம்பவத்தில் சகோதரி (15) மற்றும் அவரது இளைய சகோதரர் (13)

காயமடைந்தனர்.

நேற்று பிற்பகல் 4.17 மணி அளவில் தனது தரப்பிற்கு இச்சம்பவம் தொடர்பாகத் தகவல்

கிடைத்ததாகப் பேராக் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுப்

பிரிவின் உதவி இயக்குநர் சபரோட்ஸி நோர் அஹ்மட் தெரிவித்தார். தீயணைப்புப் படை

வருவதற்கு முன்பே உடன்பிறப்புகள் செலாமா மருத்துவமனைக்குக் கொண்டு

செல்லப்பட்டதாகவும் கூறினார்.

"விழுந்த மரங்கள் வெட்டப்பட்டு, நகர்த்தப்பட்டன. இனி எந்த ஆபத்தும் இல்லை என்பது

உறுதிப்படுத்தப்பட்டது" என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

முதற்கட்ட விசாரணையில் அப்பகுதியில் கனமழை மற்றும் புயல் ஏற்பட்டது தெரிய

வந்தது என சபரோட்ஸி கூறினார்.

மாலை 6.33 மணிக்கு சோதனை நடவடிக்கை முடிவடைத்தது.

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.