NATIONAL

ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் சடலம் புதரிலிருந்து கண்டெடுக்கப்பட்டது

30 ஏப்ரல் 2024, 4:41 AM
ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் சடலம் புதரிலிருந்து கண்டெடுக்கப்பட்டது

குவா மூசாங், ஏப் 30: இங்குள்ள கம்போங் லெம்பாகா, சுங்கை தேராவில் உள்ள புதரில் இருந்து ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் சடலம் நேற்று கண்டெடுக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட வான் யூசோப் வான் ஜாபார் (48) ஓட்டிச் சென்ற சைக்கிள் புதருக்குள்  கண்டெடுக்கப்பட்டது, மாரடைப்பு காரணமாகத் தடுமாறி புதருக்குள்  விழுந்து  இறந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது என குவா மூசாங் மாவட்ட காவல் துறைத் தலைவர் சூப்ரிண்டன்டு சிக் சூன் ஃபூ கூறினார்.

பிற்பகல் 2.30 மணியளவில் உயிரிழந்தவரின் சடலம் அவரது சைக்கிள் அருகே கண்டெடுக்கப்பட்டதாகச் சிக் சூன் கூறினார்.

முதற்கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்டவர் காலை 8 மணியளவில் தனியாகப் பொழுதைக் கழிக்க சைக்கிளில் வெளியே சென்றதாக நம்பப்படுகிறது.

"இருப்பினும், பாதிக்கப்பட்டவர் வழக்கமான நேரத்தில் வீடு திரும்பவில்லை, அவரது மனைவி அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை," என்று அறிக்கையில் ஒன்றில் சிக் சூன் தெரிவித்தார்.

பிரேதப் பரிசோதனையின் முடிவில் இறப்புக்கான காரணம் மாரடைப்பு (கரோனரி ஆர்டரி டிசீஸ்) என்று கண்டறியப் பட்டதாகவும், இந்த வழக்கு திடீர் மரணம் என்று வகைப்படுத்தப் பட்டதாகவும் அவர் கூறினார்.

- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.