NATIONAL

சாயம் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை அணைக்க ஒன்பது மணி நேரம் ஆனது

30 ஏப்ரல் 2024, 4:27 AM
சாயம் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை அணைக்க ஒன்பது மணி நேரம் ஆனது

ஷா ஆலம், ஏப் 30: மேரு தொழிற்பேட்டையில் உள்ள சாயம் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் ஒன்பது மணி நேரத்திற்கும் மேலாகப் போராடினர்.

காலை 6.35 மணிக்கு அவசர அழைப்பு வந்ததை அடுத்து, காப்பார், வட கிள்ளான், அண்டலாஸ் உட்பட 10 தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களிலிருந்து இயந்திரங்களுடன் 39 அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர் என மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குனர் சிலாங்கூர் வான் முகமட் ரசாலி வான் இஸ்மாயில் கூறினார்.

மேலும், தொழிற்சாலையின் மூன்று யூனிட்டுகளிலும் மற்றும் 10,500 சதுர மீட்டருக்கும் அதிக பரப்பளவு கொண்ட அலுவலகத்திலும் ஏற்பட்ட தீயை அணைக்கும் நடவடிக்கையில் பிபிபி ஷா ஆலமின் அபாயகரமான இரசாயனங்கள் (ஹஸ்மட்) சிறப்புக் குழுவின் இயந்திரங்களின் உதவியும் அடங்கும் என்று அவர் கூறினார்.

நேற்று காலை இங்குள்ள மேரு தொழிற்பேட்டையில் ஏற்பட்ட தீ விபத்தில் சாயம் பதப்படுத்தும் தொழிற்சாலை எரிந்து நாசமானது. ஆனால், உயிர் சேதம் அல்லது காயம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.