NATIONAL

கோலா குபு பாரு : வெள்ளியன்று ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளர் கொள்கை அறிக்கையை வெளியிடுவார்

30 ஏப்ரல் 2024, 4:26 AM
கோலா குபு பாரு : வெள்ளியன்று ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளர் கொள்கை அறிக்கையை வெளியிடுவார்

உலு சிலாங்கூர், ஏப் 30: எதிர்வரும் வெள்ளியன்று சிலாங்கூரின் ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளர் கோலா குபு பாரு  வாக்காளர்களுக்கு  தன்னுடைய கொள்கை அறிக்கையை வெளியிடுவார்.

இந்த கொள்கை அறிக்கையில் தொகுதியின் மக்கள் நலன் திட்டங்கள் மற்றும் மேம்பாட்டு திட்டங்களும் அடங்கும் என்று கோலா குபு பாரு இடைத்தேர்தலின் வேட்பாளர் பாங் சோக் தாவ் தெரிவித்தார்.

``வெள்ளிக்கிழமை அன்று இந்தப் பகுதியின் வளர்ச்சி அல்லது சமூகத்திற்கான திட்டமிடல் குறித்து, கொள்கை அறிக்கையை அறிவிப்பேன். அதன் தொடர்பான விவரங்களை அளிப்பேன்```.

"சமூகத்திற்கு எங்களின் வாக்குறுதி மற்றும் திட்டம் என்ன என்பதை எனது கொள்கை அறிக்கை மூலம் பின்னர் அறிவிப்பேன்" என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

கம்போங் துன் அப்துல் ராசாக்கில் நேற்று நடைபெற்ற ஓராங் அஸ்லி சமூகத்தினருடன் நட்புறவு சந்திப்பில் கலந்து கொண்ட பின்னர் அவர் இவ்வாறு கூறினார்.

தொகுதியில் ஏப்ரல் 27 (சனிக்கிழமை) மற்றும் மே 7 (செவ்வாய்கிழமை) ஆகிய தேதிகளில் வேட்புமனு தாக்கல் மற்றும் இடைத்தேர்தலுக்கான முன்கூட்டியே வாக்களிக்கும் தேதியை தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.