NATIONAL

தேசிய கல்வியை மறுசீரமைக்க பல்வேறு முக்கிய திட்டங்கள் அமல்

30 ஏப்ரல் 2024, 3:23 AM
தேசிய கல்வியை மறுசீரமைக்க பல்வேறு முக்கிய திட்டங்கள் அமல்

புத்ராஜெயா, ஏப் 30: தேசிய கல்வியை மறுசீரமைக்க பல்வேறு முக்கிய திட்டங்களைக் கல்வி அமைச்சகம் தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது, இதில் பாலர் பள்ளி மற்றும் 2027 பள்ளி பாடத்திட்டம் முறையை மறுசீரமைத்தல், கற்றல் நடவடிக்கையில் ஏற்படும் இடையூறுகளை களைதல் ஆகியவை அடங்கும்.

மாணவர்களின் கற்றல் பிரச்சனைகளுக்கு ஆரம்ப நிலையிலேயே தீர்வு காணப்படுவதை உறுதி செய்வதற்கு அதன் கீழ் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் பாலர் பள்ளி கல்வி விரிவுப்படுத்தப்படும் என்று அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

ஆசிரியர்களின் திறன் மற்றும் தொழில் முறையை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை உருவாக்குவதன் மூலம் அவர்களின் நிபுணத்துவத்தில் கவனம் செலுத்தப்படுகிறது என கல்வி அமைச்சு தெரிவித்தது.

"மிக சமீபத்தில், கல்வி மற்றும் கலாச்சார அமைச்சகம் ஆசிரியர்களின் டிஜிட்டல் திறன் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கற்றல் மேலாண்மை அமைப்பு (SiPP) தளத்தை அறிமுகப்படுத்தியது" என்று அறிக்கை கூறுகிறது.

``வளையும் மூங்கில்களே திறன்களை மேம்படுத்தும் அடித்தளம்’’  என்ற தலைப்பிலான நாட்டின் கல்வி முறை தொடர்பான உலக வங்கியின் அறிக்கை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுவதாகக் கல்வி அமைச்சு தெரிவித்தது.

உலக வங்கியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பாலர் பள்ளியின் கல்வி தரம் மற்றும் அணுகல், மாணவர்களின் திறன் மற்றும் ஆசிரியர்களின் தொழில்முறை மேம்பாடு போன்ற முக்கிய அமசங்கள் நிச்சயமாகக் கல்வி மற்றும் கலாச்சார அமைச்சகத்தின் கவனத்தில் உள்ளது.

- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.