பத்தாங் காலி, ஏப் 30: கடந்த 2022 டிசம்பரில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவத்தைத் தொடர்ந்து பத்தாங் காலி – கெந்திங் உல்லாச மலை வழித்தடத்தில் உள்ள சாலை சீரமைப்புப் பணிகள் எதிர்வரும் ஜூன் மாதம் நிறைவடையும் என எதிர்பார்க்கப் படுவதாகப் பொதுப்பணித்துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ அகமது மஸ்லான் தெரிவித்தார்.
சுமார் 19 மில்லியன் ரிங்கிட் செலவில் மேற்கொள்ளப்பட்ட இந்த திட்டம், வேலிகள் மற்றும் சுவர் கட்டுமானம் உள்ளிட்ட பணிகள் முடிக்கப்பட்டு 86 சதவீதத்தை எட்டியுள்ளதாக அவர் கூறினார்.
கெந்திங் மலையில் உள்ள தொழிலாளர்கள் அல்லது பத்தாங் காலி மற்றும் உலு சிலாங்கூரில் வசிப்பவர்களில் சிறப்பு அனுமதி பெறும் பயனர்களுக்குத் தற்போது ஒரு வழி மட்டுமே திறக்கப்பட்டுள்ளது என்று அஹ்மட் மஸ்லான் கூறினார்.
ஜூலை 1ம் தேதி இந்த பாதை முழுமையாகத் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
கடந்த 16 டிசம்பர் 2022 அன்று ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவத்தில் 18 பெரியவர்கள் மற்றும் 13 சிறுவர்கள் இறந்தனர்.
- பெர்னாமா


