உலு சிலாங்கூர், ஏப் 30- கோல குபு பாரு இடைத் தேர்தலில் தபால் வழி
வாக்களிக்க தகுதியுள்ள 188 வாக்காளர்களுக்காகத் தபால் வாக்குகளை
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இந்த தபால் வாக்குகளை தேர்தல் அதிகாரியால் நியமிக்கப்பட்ட தேர்தல்
பணியளார்கள் வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் முன்னிலையில்
சம்பந்தப்பட்ட வாக்காளர்களிடம் வழங்கியதாகத் தேர்தல் ஆணையத்தின்
செயலாளர் டத்தோ இக்மால்ருடின் இஷாக் கூறினார்.
மொத்தம் 178 வாக்குச் சீட்டுகள் தேர்தல் பணியாளர்கள்,
ஊடகவியலாளர்கள் தேர்தல் ஆணைய அதிகாரிகள், போலீஸ் மற்றும்
இராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட்ட வேளையில் எட்டு வாக்குச் சீட்டுகள்
வெளிநாடுகளில் உள்ள மலேசியர்களுக்கும் ஒரு வாக்குச் சீட்டு
வெளிநாட்டிலிருக்கும் வர இயலாத வாக்காளருக்கும் வழங்கப்பட்டது
என்றார் அவர்.
அனைத்து தபால் வாக்காளர்களும் தங்கள் வாக்குச் சீட்டில் குறியிட்டு,
அடையாள பிரகடனப் பத்திரத்தைப் பூர்த்தி செய்து தேர்தல் தினமான மே
11ஆம் தேதி மாலை 5.00 மணிக்குள் தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்து
விட வேண்டும் என தேர்தல் ஆணையம் நினைவூட்டியுள்ளது.
வாக்குகள் இரகசியமானவையாக இருப்பதை வாக்காளர்கள் உறுதி செய்ய
வேண்டும் என்பதோடு அந்த வாக்குச் சீட்டுகளை படம் பிடித்து சமூக
ஊடகங்களில் பகிர்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அது
வலியுறுத்தியுது.


