NATIONAL

சுங்கை கோலோக்கில் குண்டு வெடிப்பு- நான்கு தாய். பாதுகாப்புப் படையினர் காயம்

29 ஏப்ரல் 2024, 8:38 AM
சுங்கை கோலோக்கில் குண்டு வெடிப்பு- நான்கு தாய். பாதுகாப்புப் படையினர் காயம்

கோத்தா பாரு, ஏப் 29 - தாய்லாந்தின் நாராதிவாட் மாநிலத்தில் உள்ள சுங்கை கோலோக்,  கம்போங் பசேமாஸ் பகுதியில்  நேற்று நள்ளிரவு நிகழ்ந்த குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூட்டில் தாய்லாந்து பாதுகாப்புப் படை வீரர்கள் நால்வர்  காயமடைந்தனர்.

நான்கு அந்த  நான்கு பாதுகாப்புப் படை வீரர்களும் சக்கர இயக்க  வாகனத்தில்   சுங்கை கோலோக் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது வெடிகுண்டு வெடித்ததாகச் சுங்கை கோலோக் மாவட்ட காவல்துறை தலைவர்  கர்னல் ஜட்சாதாவிட் இன்பிரபன் கூறினார்.

பாதுகாப்புப் படையினரின்  வாகனங்கள் பயன்படுத்தும் பாதையில் தேடப்படும் குற்றவாளிகள் வெடிகுண்டை பதித்து வைத்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

வெடிகுண்டுத் தாக்குதலின் போதுசந்தேக நபர்கள் பாதுகாப்புப் படையினரை நோக்கி பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

பாதுகாப்புப் படை வீரர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் பொருட்டு சந்தேக நபர்களை நோக்கி திருப்பிச் சுட்டனர். பின்னர் அவர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்று விட்டனர் என்று அவர் இன்று பெர்னாமாவிடம் குறிப்பிட்டார்.

காயமடைந்த பாதுகாப்புப் படையினர் சிகிச்சைக்காக சுங்கை கோலோக் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

போலீசாரின் முதல் கட்ட  விசாரணையில் வெளிநாட்டுத்  எண் பட்டை கொண்ட வெள்ளை நிற செடான் வாகனம் சம்பவ இடத்தில் காணப்பட்டதாக ஜட்சாடவிட் கூறினார்.

சம்பவத்தைத் தொடர்ந்து, தாய்லாந்து பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பை  கடுமையாக்கியுள்ளனர். சந்தேக நபர்கள் நாட்டின் எல்லைக்குள் நுழைவதையும் வெளியேறுவதையும் தடுக்க எல்லையில் உள்ள பல சட்டவிரோதப் பாதைகளை மூடியுள்ளனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.