மஞ்சோங், ஏப் 29: லுமுட் அரச மலேசிய கடற்படைத் தளத்தில் இரண்டு ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆலோசனை சேவைகள் தேவையைப் பொறுத்து தொடரும்.
இறந்தவர்களின் உறவினர்கள் அனைவரும் இன்னும் துக்கத்தில் இருக்கின்றனர். தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்பட்ட இச்சம்பவத்தை ஏற்றுக்கொள்ளும் மன உறுதியுடன் உள்ளனரா? என பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் நோரைனி அஹமட் கேட்டார்.
"ஆலோசனையின் காலம் தனிநபரின் நிலைமையை பொறுத்தது. ஒவ்வொருவரும் தங்கள் அன்புக்குரியவர்களை, நெருக்கமானவர்களை இழந்து வருத்தத்தில் உள்ளனர்.
மேலும், மறைந்த லெப்டினண்ட் சிவசுதன், இரண்டாவது வாரண்ட் அதிகாரி டிஎம்கே முகமது ஷாரிசான் முகமட் தர்மிஸி மற்றும் இரண்டாவது வாரண்ட் அதிகாரி டி.என்.எல். நோர்ஃபராமி முகமட் சடேய் ஆகியோரின் உறவினர்களை நோரைனி நேரில் சென்று சந்தித்தார்.
பாதிக்கப்பட்ட மூவரின் உறவினர்களுக்கு தனது தனிப்பட்ட நன்கொடையும் தேசிய நலன்புரி அறக்கட்டளையின் நன்கொடையாக RM3,000 பணத்தையும் மற்றும் அத்தியாவசிய பொருட்களையும் தனது தரப்பு வழங்கியதாக நோரைனி கூறினார்.
- பெர்னாமா


