ECONOMY

உலு கிளாங் ஐடில்பித்ரி திறந்த இல்லத்திற்கு 2,000 வருகையாளர்களுடன் மந்திரி புசார்

28 ஏப்ரல் 2024, 12:16 PM
உலு கிளாங் ஐடில்பித்ரி திறந்த இல்லத்திற்கு 2,000 வருகையாளர்களுடன் மந்திரி புசார்

அம்பாங், ஏப்ரல் 28: பல்வேறு இனங்களைச் சேர்ந்த சுமார் 2,000  வருகையாளர்கள் 2024 உலு கிளாங் மாநில சட்டமன்ற (DUN) ஐடில்பித்ரி திறந்த இல்லத்தில் திரண்டு  உற்சாகப்படுத்தினர்.

அம்பாங் ஜெயா நகராண்மைக் கழக ரம்ஜான் பஜார் தளத்தில் காலை 11 மணிக்கு ஆரம்பமான இந்த விழாவில் டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கலந்து கொண்டு சிறப்பித்தார்.

சட்டமன்ற  ஒருங்கிணைப்பாளர் அலுவலகம் மற்றும் அம்பாங் ஜெயா முனிசிபல் கவுன்சில் (MPAJ) உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் உலு கிளாங் மாநில சட்டமன்ற ஒருங்கிணைப்பாளர்  ஜுவைரியா சுல்கிப்லி மற்றும் அம்பாங் ஜெயா நகராண்மைக் கழக தலைவர் டாக்டர் அனி அஹ்மத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அமிருடின் வருகையாளர்களுடன் நட்பாக நேரத்தை செலவிட்டார், அவர்களுடன் புகைப்படம் எடுப்பதற்கான அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றினார் , மேலும் சுமார் 100 குழந்தைகளுக்கு டூயட் ராயா வை  வழங்கினார்.

செண்டோல், முர்தாபக், லெமாங், ரெண்டாங், சாத்தே, அப்பம் பாலிக், ஐஸ்கிரீம், பழங்கள் மற்றும் பாட்டில் தண்ணீர் போன்ற பல்வேறு உணவுகளை வழங்கும் மொத்தம் 10 ஸ்டால்கள்  வருகையாளர்களுக்கு  சேவை வழங்கின.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.