NATIONAL

சிலாங்கூர் நதி நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் திட்டமிட்டிருந்த  முதல்  கட்ட பராமரிப்புப் பணிகள் ஒத்திவைப்பு

26 ஏப்ரல் 2024, 9:50 AM
சிலாங்கூர் நதி நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் திட்டமிட்டிருந்த  முதல்  கட்ட பராமரிப்புப் பணிகள் ஒத்திவைப்பு

ஷா ஆலம், ஏப் 26: சிலாங்கூர் நதி நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் (எல்ஆர்ஏ) திட்டமிடப்பட்ட  முதல்  கட்ட பராமரிப்புப் பணிகள் (எஸ்எஸ்பி1) புதிய தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் செயலி, இணையதளம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் புதிய தேதி அறிவிக்கப்படும்  என்று ஆயர் சிலாங்கூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

"ஆயர் சிலாங்கூர் செயலி, இணையதளம் மற்றும் எங்கள் சமூக ஊடக தளங்கள் ஆகியவை மூலம் அதிகாரப்பூர்வ மற்றும் புதுப்பித்த தகவல்களைக் காணலாம்".

முன்னதாக, லெம்பா கிள்ளானை சுற்றியுள்ள பல பகுதிகளை உள்ளடக்கிய சிலாங்கூர் நதி நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் முதல்  கட்ட பராமரிப்புப் பணிகள்  மே 14 முதல் 16 வரை மேற்கொள்ளப்படும் என்று ஆயர் சிலாங்கூர் தெரிவித்திருந்தது.

இதனால், பெட்டாலிங், கிள்ளான், ஷா ஆலம், கோலாலம்பூர், உலு சிலாங்கூர் மற்றும் கோலா சிலாங்கூர் மாவட்டங்கள் நீர் விநியோக தடையால் பாதிக்கப்படும் என அஞ்சப்பட்டது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.