NATIONAL

இலகுரக விமானம் ஒன்று இரண்டு நிமிடங்களில் அவசரமாக தரையிறக்கம்

26 ஏப்ரல் 2024, 9:41 AM
இலகுரக விமானம் ஒன்று இரண்டு நிமிடங்களில் அவசரமாக தரையிறக்கம்

கோலாலம்பூர், ஏப் 26: இன்று காலை இங்கிருந்து புறப்பட்ட இலகுரக விமானம் ஒன்று இரண்டு நிமிடங்களில் சுபாங்கில் உள்ள சுல்தான் அப்துல் அஜீஸ் ஷா விமான நிலையத்தில் (LTSAAS) அவசரமாக தரையிறக்கப்பட்டது.

டெக்ஸ்ட்ரெய்ட் லிமிடெட் மூலம் இயக்கப்படும் N566CB பதிவு எண் கொண்ட Diamond DA-42 இலகுரக விமானத்திலிருந்த இரண்டு விமானிகளும் பாதுகாப்பாக இருப்பதாக மலேசிய விமானப் போக்குவரத்து ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ நோரஸ்மான் மஹ்மூட் தெரிவித்தார்.

"சுல்தான் அப்துல் அஜீஸ் ஷா விமான நிலையத்திலிருந்து காலை 8.26 மணிக்கு அந்த குறிப்பிட்ட விமானம் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட உடனேயே சுபாங் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்திற்கு அவசர அழைப்பு வந்தது. பின்னர் விமானம் 8.28 மணிக்கு அவசரமாகத் தரையிறக்கப்பட்டது," என்று அவர் இன்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

அவ்விமானம் ஓடுபாதையில் இருந்து அகற்றப்படும் வரை, சம்பந்தப்பட்ட விமான நிலையத்தின் ஓடுபாதை தற்காலிகமாக மூடப் பட்டதாக அவர் கூறினார்.

பொது விமான போக்குவரத்து விதிமுறைகள் 2016 இன் பகுதி XXVI இன் கீழ் போக்குவரத்து அமைச்சகத்தில் உள்ள விமான விபத்து விசாரணைப் பணியகத்தால் மேலும் இதன் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும்.

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.