NATIONAL

கோல குபு பாரு இடைத் தேர்தல்- நாளை வேட்பு மனுத்தாக்கல், மே 11 தேர்தல்

26 ஏப்ரல் 2024, 3:09 AM
கோல குபு பாரு இடைத் தேர்தல்- நாளை வேட்பு மனுத்தாக்கல், மே 11 தேர்தல்

ஷா ஆலம், ஏப் 26– கோல குபு பாரு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் எதிர்வரும் மே மாதம் 11ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நாளையும் தொடக்கக் கட்ட வாக்களிப்பு மே 7ஆம் தேதியும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் கனி சாலே இன்று இங்கு நடைபெற்ற  செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

கோல குபு பாரு சட்டமன்ற உறுப்பினர் லீ கீ ஹியோங் புற்று நோய் காரணமாக கடந்த மாதம் 21ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து அத்தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

ஜசெக பிரதிநிதியான லீ (வயது 58) கடந்த மூன்று தவணைகளாக இத்தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்து வந்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.