NATIONAL

பண்டார் கோலா குபு பாருவில் ஐடில்பித்ரியை முன்னிட்டு மாநில திறந்த இல்ல உபசரிப்பு

26 ஏப்ரல் 2024, 2:03 AM
பண்டார் கோலா குபு பாருவில் ஐடில்பித்ரியை முன்னிட்டு மாநில திறந்த இல்ல உபசரிப்பு

ஷா ஆலம், ஏப் 26: நாளை பண்டார் கோலா குபு பாருவில் ஐடில்பித்ரியை முன்னிட்டு நடைபெறும் மாநில திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்வை கண்டு மகிழுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு இரவு 8 மணிக்குத் தொடங்கும்.

ராஜா மூடா தெங்கு அமீர் ஷா, டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அனைத்து சிலாங்கூர் மாநிலத் தலைவர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளனர்.

டூயேட் ராயா மற்றும் வானவேடிக்கை நிகழ்ச்சியுடன் கூடுதலாக பல்வேறு உணவுகள் பார்வையாளர்களுக்கு வழங்கப்படும் என சிலாங்கூர் மாநில அரசாங்கச் செயலாளரின் அலுவலகம் தெரிவித்தது.

“நீங்கள் எதற்காகக் காத்திருக்கிறீர்கள், #கித்தா சிலாங்கூர் 2024 ரியூ ராயா திறந்த இல்ல உபசரிப்பைக் கொண்டாடுவோம்!! அங்கே சந்திப்போம்” என முகநூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூடியூப் சிலாங்கூர்டிவி மற்றும் அனைத்து மீடியா சிலாங்கூர் சமூக ஊடகங்களிலும் இக்கொண்டாட்டத்தைக் கண்டு களிக்கலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.