NATIONAL

பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்குச் சிலாங்கூர் சுல்தான் வருகை

25 ஏப்ரல் 2024, 10:55 AM
பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்குச் சிலாங்கூர் சுல்தான் வருகை

ஷா ஆலம், ஏப் 25: கடந்த செவ்வாய்கிழமை கோம்ப்ளெக்ஸ் ஶ்ரீ பெர்டானா, புத்ராஜெயாவில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்குச் சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா வருகை புரிந்தார்.

ஐடில்பித்ரி கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்த பிற்பகல் தேநீர் சந்திப்பு நடைபெற்றதாக ராயல் அலுவலக முகநூல் பக்கத்தின் மூலம் இஸ்தானா சிலாங்கூர் தெரிவித்தது.

"பிற்பகல் தேநீர் சந்திப்பின் போது மாண்புமிகு சுல்தான் சிலாங்கூர் மற்றும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆகியோர் தற்போதைய பிரச்சனைகள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள வாய்ப்பு கிடைத்தது" என்று அச்சந்திப்பின் புகைப்படத்துடன் கூடிய குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பு குறித்து நிதியமைச்சர் அன்வாரும் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், இச்சந்திப்பில் மக்கள் மற்றும் நாடு பற்றிய கருத்துக்களையும் ஆலோசனைகளையும் சிலாங்கூர் சுல்தான் வழங்கினார்.

"மக்கள் மற்றும் நாட்டைப் பற்றிய துவாங்குவின் கருத்துக்கள் மற்றும் அறிவுரைகளால் பயனடைகிறேன்" என்று பிரதமர் முகநூலில் பதிவிட்டுள்ளார்.

- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.