ஈப்போ, ஏப் 23 - லுமுட் அரச மலேசிய கடற்படைத் தளத்தில் இரு
ஹெலிகாப்டர்கள் வானில் மோதிக்கொண்டன. இச்சம்பவம் இன்று காலை
9.30 மணியளவில் நிகழ்ந்தது.
பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ முகமது யூஸ்ரி ஹசான்
பெர்னமாவிடம் இச்சம்பவத்தை உறுதிப்படுத்தினார்.
எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள கப்பல் படை பொது தினத்தை
முன்னிட்டு அவ்விரு ஹெலிகாப்டர்களும் ஒத்திகையில் ஈடுபட்டிருந்த
போது இந்த விபத்து நிகழ்ந்ததாக அவர் சொன்னார்.
இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய விபரம் தற்போதைக்கு
கிடைக்கவில்லை. இதன் தொடர்பில் கூடுதல் தகவல்கள் பின்னர்
தெரிவிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.


