ஜெர்தே, ஏப் 23: நேற்றிரவு கம்போங் கிராயில் தனியார் பட்டுவாடா நிறுவன ஊழியர் ஒருவர் கால்வாயில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டார்.
வான் முஹம்மட் குசைமி அபு செபியன் (24) என்பவர் ஓட்டிச் சென்ற யமஹா ஈகோ எல்சி என்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்ததால் இரவு 8 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது என்று பெசுட் மாவட்ட காவல் துறைத் தலைவர் அப்துல் ரோசாக் முஹம்மது தெரிவித்தார்.
இச்சம்பவத்தின் போது, வான் முஹம்மட் குசைமி கம்போங் லேஅவுட் கெராயிலிருந்து தனது வீட்டிற்கு திரும்புவதற்காகக் கம்போங் கிராய் துவாவுக்குச் சென்று கொண்டிருந்தார்.
"பாதிக்கப்பட்டவர் ஒரு கிலோமீட்டருக்கு நீரோட்டத்தில் இழுத்துச் செல்லப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்," என்று பெர்னாமாவைத் தொடர்பு கொண்டபோது அப்துல் ரோசாக் கூறினார்.
பிரேதப் பரிசோதனைக்காக உடல் பெசுட் மருத்துவமனை தடயவியல் பிரிவுக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும், சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 இன் பிரிவு 41(1) இன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு தாகவும் அவர் கூறினார்.
– பெர்னாமா


